ஆங் சான் சூகி விரைவில் விடுதலை ஆகவேண்டும் என வேண்டுதல் - சூகியின் வீட்டு முன் ஏராளமான பொதுமக்கள் பிரார்த்தனை
Feb 26 2021 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மரில் கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி விரைவில் விடுதலை ஆகவேண்டும் மற்றும், அவரது உடல் நிலை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக அவரது வீட்டு முன் ஏராளமான பெண்கள் பிரார்த்தனை நடத்தினர்.
மியான்மர் நாட்டு ஆளும் கட்சியாக விளங்கிய ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவர் ஆங் சான் சூகியை இம்மாதத் தொடக்கத்தில் கைது செய்த அந்நாட்டு ராணுவம், ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் பின் ராணுவத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உலக நாடுகளும் மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றன. இருப்பினும், கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை. இந்நிலையில், சூகி விரைவில் விடுதலை ஆகவேண்டும் என்பதற்காக யங்கோன் நகரில் அவரது வீட்டு முன் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.