நூற்றாண்டு கால பாரீஸ் பறவைகள் சந்தையை மூட நகர நிர்வாகம் முடிவு
Feb 26 2021 7:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நூற்றாண்டுகள் பழமையான பாரீஸ் பறவைகள் சந்தையை மூட அந்நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் புகழ்பெற்ற பறவைகள் சந்தை கடந்த 1808ம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவருகிறது. இந்த பறவைகள் சந்தை பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளை வெகுவாகக் கவரும் வகையில் செயல்பட்டுவருகிறது. ஆனால் பறவைகள் நலன் சார்ந்த அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றை மையப்படுத்தி இந்த சந்தையை மூட பாரீஸ் முடிவெடுத்துள்ளது. மேலும், இந்த சந்தையில் விற்பதற்காகவே மிகவும் அரிதான பறவைகளைப் பிடித்து கடத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக பாரீஸ் நகர நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சந்தையை வரும் 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டிற்குள் மலர் சந்தையாக மாற்றவும், அதுவரை பறவை விற்பனையாளர்கள் தொடர்ந்து செயல்பட அனுமதியளித்தும் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தை மூடப்பட்டால், பறவைகளை விற்பவர்களுக்கு மாற்று தொழில்களில் ஈடுபட உதவிகள் அளிக்கவும் பாரீஸ் முடிவெடுத்துள்ளது.