இத்தாலியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி - வாடிகன் நிர்வாகம் சார்பில் ஏழைகளைக் கண்டறியும் பணிகள்
Apr 1 2021 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலி தலைநகரில் வசிக்கும் வீடற்றவர்கள் மற்றும் ஏழைகளைக் கண்டுபிடித்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வாடிகன் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
உலகிலேயே மிகச்சிறிய நாடாக கருதப்படும் வாடிகனில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பின் அதிகாரப்பூர்வ அலுவலகம் அமைந்துள்ளது. வாடிகனில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. 84 வயதான போப் பிரான்சிஸ் முதல் நாளிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில், தற்போது இத்தாலி தலைநகர் ரோமில் வசிக்கும் வீடற்றவர்கள் மற்றும் ஏழைமக்களைக் கண்டுபிடித்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வாடிகன் நிர்வாகம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 100 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அனைவரையும் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் போப் பிரான்சிசின் அலுவலகம் அறிவித்துள்ளது.