நைஜீரியாவில் சிறுவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் 50 வயது பெண் தொழிலதிபர்
Apr 1 2021 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியாவில் இளவயதில் பள்ளிக்கூடம் செல்லத் தவறிய பெண் ஒருவர் சிறுவர்களுடன் இணைந்து 50வது வயதில் கல்வி கற்கத் தொடங்கியுள்ளார்.
நைஜீரியாவின் கிவாரா நகருக்கு அருகில் வசித்து வரும் பெண் ஷேட் அஜாயி, தோல் பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறார். அவருக்கு தற்போது 50 வயதாகிறது. சிறுவயதில் தினக்கூலி வேலைக்குச் சென்றதால் பள்ளிக்குச் சென்று பாடம் படிக்க முடியாத அஜாயி, தற்போது ஆங்கில அறிவு இல்லாதது அவரது தொழில் வளர்ச்சிக்கு எதிராக உள்ளதாக கருதுகிறார். இதனால், இந்த வயதிலும் பள்ளியில் சேர்ந்து பாடம் படிக்க முடிவு செய்த அவர், தம்மை விட 40 வயது குறைவான மாணவர்களுடன் இணைந்து சீருடை அணிந்து தினமும் பள்ளிக்குச் செல்கிறார். இந்த வயதிலும் சிறிய பிள்ளைகளைப் போல் சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வது பெருமையாக இருப்பதாக அவர் கூறுகிறார். அவருடன் படிக்கும் பிற மாணவர்கள் 11 முதல் 13 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.