தாய்லாந்தில் கொழுத்தும் வெயிலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முயற்சி - பனிக்கட்டிகளில் பொதிந்த இறைச்சியை புலிகளுக்கு அளிக்கும் பூங்காக்கள்
Apr 1 2021 7:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்தில் கொழுத்தும் வெயிலைச் சமாளிக்க, பூங்காக்களில் உள்ள புலிகளுக்கு ஐஸ் கட்டிகளுக்குள் பொதிந்த இறைச்சி அளிக்கப்படுகிறது.
தாய்லாந்தில் நாடு முழுவதும் கொழுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறும் நிலையில் விலங்குகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூங்காக்களில் வெப்பத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ச்யாங் மாய் நகரில் உள்ள பூங்காவிலும் இதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமார் 50 புலிகள் இப்பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கு ஐஸ் கட்டிகளில் பொதிந்த இறைச்சியை பூங்கா பராமரிப்பாளர்கள் அளித்துவருகின்றனர். இதன் மூலம் புலிகளின் உடல் வெப்பத்தைக் குறைத்து, வெயில் கொடுமையிலிருந்து காக்கமுடியும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்ற முயற்சிகள் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.