பிரான்சில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையைத் தடுக்க மீண்டும் பொதுமுடக்கம் - அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனம்
Apr 1 2021 7:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்சில் கொரோனா மூன்றாவது அலைப் பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்திய அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்திருக்கும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதையடுத்து பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளுக்கு இடம்இன்றித் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே நாடு தழுவிய பொதுமுடக்கத்துக்கு உத்தரவிட்ட அதிபர் இம்மானுவல் மாக்ரான், கல்வி நிலையங்களுக்கும் மூன்று வாரங்களுக்கு விடுமுறை அறிவித்தார். இது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதே போல் பொதுமக்கள் தரப்பிலும் அதிபரின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.