பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது திட்டமிட்டு வாகனத்தை மோதச் செய்து விபத்து - அமெரிக்‍க நாடாளுமன்றக்‍ கட்டடம் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு

Apr 3 2021 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க நாடாளுமன்ற கட்டடத்தின் அருகில் வாகனத்தை மோதச் செய்த தாக்‍குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தாக்‍குதல் நடத்தினர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது நான்கு சக்‍கர வாகனத்தில் வேகமாக வந்த நபர் ஒருவர் நாடாளுமன்ற கட்டடத்தின் அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது வாகனத்தை மோதினார். பின்னர் அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், கத்தியுடன் அதிகாரிகளை நோக்‍கிப் பாய்ந்தார். இருப்பினும் போலீசாரின் துப்பாக்‍கி சூட்டில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இத்திலேயே உயிரிழந்தார். இத்தாக்‍குதல் தீவிரவாத தாக்‍குதல் அல்ல என அமெரிக்‍க​ போலீசார் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து நாடாளுமன்ற கட்டடத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00