ஸ்மார்ட் போன் தயாரிப்பு - விற்பனை நிறுத்தம் : எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு
Apr 5 2021 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறுவதாக, எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மிஷின் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிலையில், மொபைல் போன் தயாரிப்பிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு கால் பதித்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, எல்.ஜி., நிறுவனத்தால் மொபைல் போன் விற்பனையில் காலூன்ற முடியவில்லை. இந்நிலையில், மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையிலிருந்து, ஜூலை 31-ம் தேதிக்கு பிறகு வெளியேறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, பயன்பாட்டிலுள்ள மொபைல் போன்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்கும் என எல்.ஜி., அறிவித்துள்ளது. வரும் காலங்களில், எலக்ட்ரானிக் வாகனத் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.