வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை அதிகரிப்பு - 26 பேர் உயிரிழந்ததாக வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Apr 5 2021 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கதேச படகு மூழ்கிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 26 ஆக அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் கொரோனா பரவலைத் தடுக்‍கம் விதமாக நாடு முழுவதும் ஒருவாரத்துக்‍கு பொதுமுடக்‍கம் அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்த பொதுமக்‍கள் சொந்த ஊர்களுக்‍குத் திரும்பத் தொடங்கினர். நரயன்கஞ்ச் மாவட்டத்திலிருந்து ஒரு படகில் 50க்‍கும் மேற்பட்ட பொதுமக்‍கள் மெக்‍னா ஆற்றின் வழியாக முன்ஷிகிஞ்ச் மாவட்டத்துக்‍குப் பயணம் செய்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. டாக்‍காவிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அந்த படகு சென்ற போது ஒரு சரக்‍குக்‍ கப்பலில் மோதி மூழ்கியது. இந்த விபத்தில், தண்ணீரில் மூழ்கிய படகில் இருந்து ஒரு சிலர் நீந்திக்‍ கரைசேர்ந்த நிலையில், 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்‍கப்பட்டது. ஆனால், கடலோர காவல் படையினர் படகை மீட்டபோது மேலும் 21 பேர் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00