அமெரிக்காவில் இன படுகொலைகளைக் கண்டித்து நியூயார்கில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Apr 5 2021 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் இனரீதியான படுகொலைகளைக் கண்டித்து நியூயார்க் நகரில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் வெள்ளை இன ஆதிக்கவாதிகளின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. ஆப்ரிக்க அமெரிக்கர்களைக் கொடூரமாகக் கையாண்ட இது போன்ற ஆதிக்கவாதிகள் ஆசிய மக்கள் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அட்லாண்டாவில் நடத்தப்பட்ட இது போன்ற ஒரு தாக்குதலில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாடு முழுவதும் தொடரும் இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக ஒவ்வொரு வாரமும் நியூயார்க் நகரில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இப்போராட்டங்களைத் தொடர்ந்து, நியூயார்க் நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.