நைஜீரியாவில் அதிரடி தாக்‍குதல் மூலம் ஆயிரத்து 800-க்‍கும் மேற்பட்ட கைதிகளை தப்பிக்கச் செய்த பிரிவினைவாதிகள் - நாடு முழுவதும் பெரும் பரபரப்பு

Apr 7 2021 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
நைஜீரியாவில் தாக்‍குதல் நடத்தி சிறையில் இருந்து ஆயிரத்து 800-க்‍கும் மேற்பட்ட கைதிகளை பிரிவினைவாதிகள் தப்பிக்‍கச் செய்த சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் அரசுக்‍கு எதிரான பிரிவினைவாதிகள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களை கடத்துவது, கடற்கொள்ளையில் ஈடுபடுவது என தொடர்ந்து பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு அரசுக்‍கு சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் Owerri நகரில் உள்ள சிறைச்சாலையின் சுவற்றை வெடிவைத்து தாக்‍கிய பிரிவினைவாதிகள், தானியங்கி துப்பாக்‍கிகள் மற்றும் ராக்‍கெட் ஏவுகணைகளுடன் சிறைக்‍குள் சென்று அங்கிருந்த காவலர்களை கடுமையாக தாக்‍கினர். பின்னர் சிறையில் இருந்து ஆயிரத்து 800-க்‍கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00