விவாகரத்தான பெண் என்பதால் மிசஸ் இலங்கை பட்டம் பறிப்பு : கணவரை விவாகரத்து செய்யவில்லை என விளக்கம் அளித்ததால் மீண்டும் மகுடம் சூடிய பெண்
Apr 8 2021 9:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மிசஸ் இலங்கை பட்டம் வென்றவரிடம் இருந்து ஒரு சில நிமிடங்களிலேயே அந்த பட்டம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2021-ம் ஆண்டுக்கான மிஸ் இலங்கை பட்டம் புஷ்பிகா சில்வா என்பவருக்கு வழங்கப்பட்டது. கிரீடத்தை சூடிய மகிழ்ச்சியில் இருந்த புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இந்த பட்டத்தை பெற தகுதி இல்லை என கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலின் கிரீடத்தை பறித்தார். விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான், ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததை அடுத்து புஷ்பிகாவுக்கே பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.