அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசி போட வயது வரம்பில் கட்டுப்பாடு - மிகவும் அரிதாக ரத்தம் உறைவதைத் தொடர்ந்து அரசு நடவடிக்‍கை

Apr 8 2021 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ​ஜெனீகா தடுப்பூசி போடுவோரின் வயது வரம்பில் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ஆக்‍ஸ்ஃபோர்ட் பல்கலைக்‍கழகமும், பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் நாடுகளின் அஸ்ட்ரா ஜெனீகாவும் இணைந்து கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த தடுப்​பூசி போடும் போது மிகவும் அரிதாக ஒருசிலருக்‍கு ரத்தம் உறைந்து போவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பல்வேறு நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த இடைக்‍கால தடை விதித்தன. ஆனால், இத்தடுப்பூசிக்‍கு எதிரான புகார்களுக்‍கு போதிய ஆதாரமில்லாததால் தடைகள் முடிவுக்‍கு வந்தன. இருப்பினும் மிகவும் அரிதாக பல்வேறு நாடுகளில் இதே போன்ற புகார்கள் தொடர்ந்துவருகின்றன. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இத்தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் வயதுக்‍கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளன. பிரிட்டனில் 18 முதல் 29 வரை வயதுடையோருக்‍கு அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசி போடப்படாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00