உலக நாடுகளுடன் சுமூகமான உறவை விரும்புகிறோம் : ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டத்தில் தாலிபன்கள் பேச்சு

Oct 21 2021 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக நாடுகளுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள காத்திருப்பதாக ரஷ்யாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

அஃப்கானிஸ்தானின் மேம்பாட்டுக்கு உதவ கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்யா உருவாக்கிய கூட்டமைப்பின் சார்பில், அஃப்கானிஸ்தானின் புனரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. இதில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகளின் பிரதிநிதிகளும், தாலிபான்களின் உயர்மட்ட குழுவினரும் பங்கேற்றனர். அண்டை நாடுகளுடன் நட்புடன் இருக்க வேண்டுமென, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிகள், தாலிபன்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு பதிலளித்துள்ள அஃப்கானிஸ்தான் இடைக்கால அரசின் துணைப்பிரதமராக உள்ள அப்துல் சலாம் ஹனாஃபி, இந்த பேச்சுவார்த்தையை சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக கருதவதாகத் தெரிவித்தார். அஃப்கானிஸ்தானில் அமைதி மற்றும் மறுவாழ்வை கொண்டு வர தாங்கள் முயற்சித்து வருவதாகவும், உலக நாடுகளுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவே தாங்கள் விரும்புவதாகவும் அஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00