பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்‍க மருத்துவர்கள் புதிய சாதனை

Oct 21 2021 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி புதிய சாதனை படைத்துள்ளனர்.

சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் வாடும் மனிதர்களுக்‍கு உரிய மாற்று உறுப்புகள் கிடைப்பதில் சிக்‍கல் ஏற்படுவதால் உயி​ரிழக்‍க நேரிடுகிறது. இதனை தவிர்க்‍க விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சிக்கான ஆய்வுகளை அமெரிக்க மருத்துவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த வகையில், நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு உறவினர்கள் அனுமதியுடன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சோதனை நடத்தினர். பெண்ணின் உடலில் பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியது. பன்றியின் சிறுநீரகம் அப்பெண்ணின் உடம்புக்கு வெளியே வைத்து அவரின் ரத்த குழாய்களில் இணைக்கப்பட்டு 3 நாட்கள் பராமரிக்கப்பட்டது.

அது மூளை சாவு அடைந்த நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாமல் இயங்கியது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00