ஒமைக்ரான் வகை கொரோனாவின் வீரியம் குறித்து தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் ஆகலாம் - டெல்டா வகை கொரோனாவை விட, ஒமைக்‍ரான் வைரசால் குறைவான பாதிப்பே ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து

Dec 3 2021 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒமைக்ரான் வகை கொரோனாவின் வீரியம் குறித்து தெரிந்துகொள்ள இன்னும் நாட்கள் ஆகலாம் என்றும், அதேநேரம் டெல்டா வகை கொரோனாவை விட, ஒமைக்‍ரான் வைரசால் குறைவான பாதிப்பே ஏற்படுவதாகவும் தென்னாப்ரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் தொடர்பாக தென்னாப்ரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஒமைக்‍ரானால் தற்போதைய சூழலில் பாதிப்பு குறைவாக இருப்பினும், அதன் வீரியம் குறித்து வரும் காலங்களில்தான் தெரிய வரும் என அவர் கூறியுள்ளார். ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும், சுவை இழப்பு, வாசனையின்மை, காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம் ஒமைக்ரான் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் ஏஞ்சலிக் கோட்ஸி குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00