ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை -மியான்மர் நீதிமன்றம் உத்தரவு
Jan 10 2022 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முன்னணி ஜனநாயகத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். ஆங் சாங் சூகி மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஆண்டு தேர்தலின்போது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியது, மக்களை தூண்டும் வகையிலான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டது உள்ளிட்ட வழக்குகளில், ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, கடந்த மாதம் 6-ம் தேதி மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசின் நடைமுறைகளை பின்பற்றாமல் வாக்கி டாக்கிகளை வாங்கியது உள்ளிட்ட வழக்குகளில், ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.