லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தொழில்நுட்பக்கோளாறால் தண்டவாளத்தில் நின்றது விமானம் - அதிவேகமாக சென்ற ரயில் மோதிய பரபரப்பு வீடியோ காட்சிகள்
Jan 10 2022 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்ற விமானத்தின் மீது, அதிவேகமாக சென்ற ரயில் ஒன்று மோதிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து புறப்பட்ட Cessna விமானம், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ரயில் தண்டவாளத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் விமானி மட்டுமே பயணித்தார். காயமடைந்த விமானியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விமானியை மீட்ட சில நிமிடங்களிலேயே, வேகமாக வந்த ரயில் ஒன்று, தண்டாவளத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது. இதில், விமானம் சுக்கு நூறாக நொறுங்கியது.