உகாண்டாவில் இரண்டு ஆண்டுகள் நீடித்த பொதுமுடக்கம் நிறைவு : பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் சென்ற மாணவர்கள்

Jan 11 2022 7:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
உகாண்டாவில் நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில், அது நிறைவு பெற்று, பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.

கொரோனா பரவலையடுத்து, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும், கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் 20-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகளும் மூடப்பட்டன. அதன்பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், தொற்று பரவல் அதிகரிப்பால் மீண்டும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

உலகின் பிற நாடுகளில் எல்லாம் கொரோனா பரவல் குறைந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டாலும் உகாண்டாவில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடித்தன. பள்ளிகள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்ததால், கிராமப்புற பள்ளி வகுப்புறைகளில் செடிகள் வளர்ந்து காணப்பட்டன. மாணவர்கள் பலர், தங்க சுரங்கங்களில் பணிகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளிகள் எப்போது திறக்கும் என பெற்றோர்களும் மாணவர்களும் ஏங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், உகாண்டாவில் பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர். கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00