அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா : இதுவரை இல்லாத அளவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதி
Jan 11 2022 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதத்தின் 2-வது வாரத்தில் இருந்தே, கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 3 வாரங்களில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. 2-வது அலையின்போது, கடந்த ஜனவரி மாதம், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 646 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், 10 சதவீதம் நோயாளிகளே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 சதவீதம் பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுவதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 2 அல்லது 3 வாரங்களில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும், மருத்துவர்கள் கணித்துள்ளனர்.