இலங்கை - சீனா உறவில் எந்த மூன்றாவது நாடும் தலையிடக்கூடாது - இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை
Jan 11 2022 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை - சீன உறவில் எந்த மூன்றாவது நாடும் தலையிடக்கூடாது என இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங்க யி, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினார். இலங்கை - சீனா நாடுகளிடையிலான நட்பு 2 நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாக தெரிவித்தார். இலங்கை - சீன உறவு, வேறு மூன்றாம் நாடுகளை குறிவைக்கவில்லை என்றும், இரு நாட்டு உறவில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்றும் கூறினார். சீனாவின் வசம் சென்ற இலங்கை அம்பன்தோட்ட துறைமுக குத்தகை, கொழும்பு துறைமுக நகர திட்டம் போன்றவை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக பார்க்கப்படும் நிலையில், சீன வெளியுறவு அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.