ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவும் ஒமைக்ரான் : பல்வேறு நாடுகளில் ஜனவரி முதல் வாரத்தில் மட்டும் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒமைக்‍ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

Jan 12 2022 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும், ஜனவரி முதல் வாரத்தில் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒமைக்‍ரான் வைரஸ் பாதிப்புக்‍கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு - W.H.O. தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்‍ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒமைக்‍ரான் தொற்றுக்‍கு ஆளாகிவிட்டதாகவும், முந்தைய 2 வாரங்களுடன் ஒப்பிடும்போது, அது, 2 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு - W.H.O.-வின் ஐரோப்பிய இயக்‍குனர் டாக்‍டர் Hans Kluge, டென்மார்க்‍ தலைநகர் Copenhagen-ல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குறிப்பாக, ஐரோப்பாவின் 26 நாடுகளில், ஜனத்தொகையில் ஒரு சதவீதம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்‍கள் தொகையில் 50 சதவீதம் பேர் அடுத்த 2 மாதங்களில் கொரோனா மற்றும் ஒமைக்‍ரான் தொற்றுக்கு ஆளாகக்‍ கூடும் என அமெரிக்‍காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் பல்கலைக்‍கழக சுகாதார மையம் தெரிவித்திருப்பதை டாக்‍டர் Hans Kluge சுட்டிக்‍காட்டியுள்ளார். இதனைத் தடுக்‍க வேண்டுமானால், அனைவரும் முகக்‍ கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும், தடுப்பூசிகள் செலுத்திக்‍ கொள்ள வேண்டும், பூஸ்டர் Dose ஊசிகளையும் போட்டுக்‍ கொள்ள வேண்டும் என்று டாக்‍டர் Hans Kluge வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00