இந்திய-சீன எல்லை பிரச்னையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது : வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தகவல்
Jan 12 2022 8:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய-சீன எல்லை பிரச்னையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.
சீனா-இந்தியாவுடன் லடாக் பகுதியில் தொடர் எல்லை மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில் விரைவில் இந்திய-சீன ராணுவ படைகள் இடையே 14வது சுற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்றும் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 20 மாதங்களாக நிலவிவரும் சீன ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து இந்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய-சீன எல்லையில் நடைபெறும் தினசரி தகவல்களை அன்றாடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருவதாகக் கூறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் ஹாங்காங், தைவான் உள்ளிட்ட பல நாடுகளை எல்லை விவகாரத்தில் சீனா அச்சுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து அமெரிக்கா எப்போதும் குரல் கொடுக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.