ஒரே வாரத்தில் 2 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - உலக நாடுகள் கடும் கண்டனம்

Jan 12 2022 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒரே வாரத்தில் 2 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்‍கு, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி அளித்து வரும் வடகொரியா, அதன் மூலம் தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் சர்வதேச அரசியல் அரங்கில் சர்ச்சை நீடித்து வருகிறது.

கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் அதிநவீன Ballistic வகை ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. இந்நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஏவுகணை சோதனையைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளன. ஒரேவாரத்தில், இரண்டாவது முறையாக வடகொரியா மேற்கொண்டுள்ள ஏவுகணை சோதனை அப்பிராந்தியத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00