சிலி நாட்டில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து : முற்றிலும் எரிந்து தரைமட்டமான நூற்றுக்கணக்கான வீடுகள்

Jan 12 2022 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து தரைமட்டமாகின.

வடக்‍கு சிலியின் Atacama மாகாணத்தில் உள்ள Iquique நகராட்சியில் ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்பில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீடுகள் அனைத்தும் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததால், தீ அதிவேகத்தில் பரவியது. கொளுந்து விட்டு பற்றி எரிந்த தீ, மளமளவென பல்வேறு பகுதிகளுக்‍கும் வேகமாக பரவியது. இதனையடுத்து, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடத்திற்கு அற்புறப்படுத்தப்பட்டனர். எனினும், நல்லவேளையாக இக்கொடூர விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வசிக்கும் ஏழை மக்கள், அரசாங்கம் தங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். குடியிருப்புவாசிகள், தங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்றும் அவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது? என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00