குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட்டாலும் கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலன் கிடைக்காது - ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்

Jan 12 2022 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலனை அளிக்காது என்று ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்‍கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நீண்ட நாட்களுக்‍கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. நாடு முழுவதும், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்தோர், இணைநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. மேலும் முதல் நாளிலேயே 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்‍கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக்‍ மாண்டவியா தெரிவித்தார். இந்நிலையில், குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலனை அளிக்காது என்று ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. சரியான கால இடைவெளியின்றி தடுப்பூசி போடுவது, நோய் எதிர்ப்பாற்றலை மந்தப்படுத்தும் என்றும், பொது மக்களிடையே தடுப்பூசி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00