அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் யூத வழிபாட்டு தலத்தில் சிக்கியுள்ள 4 பிணை கைதிகள் மீட்பு : மீட்கப்பட்ட 4 பேரும் நலமுடன் இருப்பதாக டெக்சாஸ் ஆளுநர் தகவல்

Jan 16 2022 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் யூத வழிபாட்டு தலத்தில் சிக்கிய பிணை கைதிகள் 4 பேரும் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் டெக்‍சாஸ் மாநிலத்தின் கொல்லிவில்லே நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்‍களை துப்பாக்‍கி முனையில் சிறைபிடித்தார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்‍கு விரைந்த போலீசார், பிணை கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களை சிறைவைத்த நபரிடம் அந்நாட்டு SWAT குழுவினர் பல மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிணை கைதிகளாக வைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 3 பிணை கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக, டெக்சாஸ் மாகாண ஆளுநர் Greg Abbott தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கவனத்துக்‍குக்‍ கொண்டு செல்லப்பட்டுள்ள வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00