டோங்கோ தீவுக்‍கு அருகே கடலுக்‍கு அருகே வெடித்துச் சிதறிய எரிமலை - கடலோர கிராமங்களை தாக்கிய சுனாமி

Jan 16 2022 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கோ தீவுக்கு அருகே, கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததின் தாக்‍கம் பெரு நாட்டிலும் உணரப்பட்டது. அங்கு கடல் நீர் உட்புகுந்ததால் பொதுமக்‍கள் அலறியடித்துக்‍ கொண்டு ஓடினர்.

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கோ தீவில் உள்ள ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால், ராட்சத அலைகள் உருவானது. அப்போது ஏற்பட்ட சுனாமி அலைகள் டோங்கோ தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. எனினும், சுனாமியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே, டோங்கோ தீவில், கடலுக்‍கு அடியில் ஏற்பட்ட எரிமலையின் தாக்‍கம் விளைவாக, பெரு நாட்டிலும் கடல் நீர் ஊருக்‍குள் புகுந்தன. Pisco நகரில் உள்ள கடற்கரையொட்டிய பகுதிகளில், கடல் நீர் புகுந்ததால், பொதுமக்‍கள் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்‍கையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, டோங்கோ எரிமலை வெடிப்பு காரணமாக, அமெரிக்‍காவுக்‍கு சொந்தமான Alaska மாகாணம் மற்றும் Hawaii தீவிலும், கடல் அலைகளின் சீற்றம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, கலிபோர்னியாவில், கடற்கரையோரம் வசிக்‍கும் மக்‍களை, அம்மாகாண போலீசார் அப்புறப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00