அஃப்கானிஸ்தானில் உரிமையை மீட்கக்கோரி பெண்கள் போராட்டம் - 4 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள ராணுவ பெண் அதிகாரியை விடுவிக்கவும் கோரிக்கை
Jan 17 2022 9:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஃப்கானிஸ்தானில், கடந்த 4 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள ராணுவ பெண் அதிகாரியை விடுவிக்க கோரியும் பெண்கள் உரிமையை மீட்கவும் கோரி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் காபூலில் திரண்ட பெண்கள், தலிபான்களின் தவறான அதிகாரப் போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆப்கானில் உள்ள பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தலிபான்களுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்களை தலிபான் ஆதரவு காவல்துறையினர் தள்ளினர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராணுவ பெண் அதிகாரியான அலியா அஸிஸியை கடந்த அக்டோபரில் தலிபான்கள் கைது செய்தனர். அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை. தலிபான்களுக்கு எதிராக மக்கள் திரண்டு போராட வருமாறு வாசகங்களை கொண்ட பதாகைகளை பெண்கள் கைகளில் ஏந்தி வந்தனர்.