கஜகஸ்தானில் அரசுக்‍கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 225 பேர் பலி - கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதால் மக்‍கள் அச்சம்

Jan 17 2022 9:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
கஜகஸ்தானில் அரசுக்‍கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 225-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றும் தற்போது அதிகரித்து வருகிறது.

கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக, இம்மாத தொடக்‍கத்தில் நாடு முழுவதும் பொதுமக்‍கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கார்கள், கட்டிடங்கள், வங்கிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில் ராணுவ வீரர்கள் 19 பேர் உட்பட 225 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், ரஷ்ய ராணுவம் வரவழைக்‍கப்பட்டதால் அங்கு வன்முறை குறைந்தது.

இதனிடையே, கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவமனைகளில் விரைவாக படுக்கை பற்றாக்குறை உண்டாகக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00