ஆப்கனில் மக்கள் விரோத போக்கில் மீண்டும் தலிபான்கள் : திருமணம், உள்ளூர் நிகழ்ச்சிகளில் இசைக்கருவிகளை இசைக்க தடை - இசைக்கருவிகளை பறித்து தீயிட்டு கொளுத்தி அராஜகம்

Jan 17 2022 9:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
அஃப்கானிஸ்தானில் இசைக்‍கருவிகளை தலிபான் தீவிரவாதிகள் தீயிட்டு எரித்ததை கண்டு இசைக்‍கலைஞர்கள் கண் கலங்கினர்.

தலிபான்கள் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டில் பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்வோர் இசை கேட்கவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள் தடை விதித்து இருந்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் இசைக்‍கலைஞர் ஒருவரிடம் இருந்து இசைக்கருவி யை வலுக்‍கட்டாயமாக பறித்த தலிபான்கள், நடுரோட்டில் தீயிட்டு எரித்தனர். இந்த வீடியோவை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இசைக்‍கருவி தீயில் எரிவதை கண்டு அந்த இசைக்‍ கலைஞர் அழுத நிலையில், தலிபான்கள் அவரது அவல நிலையை கண்டு சிரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00