புத்தாண்டை ஒட்டி வசந்தகாலப் பயணங்கள் சீனாவில் தொடக்கம் - உலகிலேயே அதிகம் பேர் பயணிக்கவுள்ளதாக தகவல்
Jan 17 2022 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இடம்பெயரும் வசந்தகாலப் பயணங்கள் சீனாவில் தொடங்கியுள்ளன.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வசந்த காலத்தில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு, வரும் பிப்ரவரி 1ம் தேதி பிறக்கும் புத்தாண்டு புலி ஆண்டாக மலர இருக்கிறது. இந்த புத்தாண்டு கொண்ட்டாட்டங்களின் ஒரு பகுதியாக வெளியூர்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது ஆங்காங்கே கொரோனா பரவல் இருப்பினும், வசந்தகாலக் கொண்டாட்டங்கள் 40 நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ரயில், விமானம் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாளத் தேவையான நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளையும் சீன அரசு தொடங்கியுள்ளது.