வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதற்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
Jan 17 2022 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதற்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த மாதத்தில் நான்காவது பரிசோதனையாக இரண்டு குறைந்த தொலைவு ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. தலைநகர் ப்யோங்யாங் அருகே இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமைதி வழியில் பேச்சு நடத்த வடகொரியா முயலவேண்டும் என தென்கொரியா வலியுறுத்தியுள்ளதுடன், ஏவுகணைப் பரிசோதனை முயற்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல், வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது அப்பகுதியில் நிலவும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என ஜப்பான் கருத்து தெரிவித்துள்ளது. இதே போல, கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி நிலவுவதை வடகொரியா உறுதி செய்யவேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.