அபுதாபி விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட ட்ரோன் வெடிகுண்டு தாக்‍குதல் இரண்டு இந்தியர்கள் உள்பட மூன்று பேர் பலி - ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு

Jan 17 2022 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
அபுதாபி விமான நிலையம் மீது ட்ரோன் மூலம் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக தலைநகரமான அபுதாபியில் உள்ள விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த தாக்குதலில் மூன்று எண்ணெய் லாரிகள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் சிறிய விமான பாகங்களை சம்பவ இடத்தில் இருந்து மீட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் சூழலில், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர். ட்ரோன் மூலம் இத்தாக்குதலை நிகழ்த்தியதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா கூட்டுப்படையினருடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரக படைகளும் போரிட்டு வரும் சூழலில், இத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00