மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்தும் பலனில்லை - சீனாவில் கடந்த 61 ஆண்டில் இல்லாத வகையில், மக்கள் தொகை வளர்ச்சி சரிவு
Jan 18 2022 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்தும், சீனாவில் கடந்த 61வது ஆண்டில் இல்லாத வகையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுக்கான மக்கள் தொகை அறிக்கையை சீன தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2021-ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை 6 லட்சம் அதிகரித்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே 6 லட்சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளது. சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்கிய அந்நாட்டு அரசு, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிவித்தது. அத்துடன், 3 குழந்தைகளை
பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், தம்பதிகளுக்கு பல்வேறு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்தன. இருப்பினும் சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இந்த போக்கு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.