கடலுக்கடியில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சுனாமி : பசிபிக் கடல் பகுதியில் சல்பர்-டை-ஆக்சைடு பரவல்
Jan 18 2022 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோங்காவில் கடலுக்கடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பினால், பசிபிக் கடலில் சல்பர்-டை-ஆக்சைடு பரவியுள்ள செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தென் பசிபிக் கடலில் உள்ள டோங்கா தீவில், கடலுக்கடியில் உள்ள எரிமலை கடந்த சனிக்கிழமையன்று வெடித்துச் சிதறியது. இதனால், தீவு முழுவதும் சுனாமி அலைகள் ஏற்பட்டதோடு, இதன் தாக்கம், Fiji, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திலும் உணரப்பட்டது. இந்த எரிமலை வெடிப்பின் தாக்கத்தினால், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட் புகுந்தது. இந்த எரிமலை வெடிப்பினால், பசிபிக் கடலில், சல்பர்-டை-ஆக்சைடு பெருமளவில் பரவியுள்ளது. இதன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.