ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படை தாக்குதல் : வான்வழி தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு என தகவல்

Jan 19 2022 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
அபுதாபியில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்டக் காலமாக போர் நிலவி வருகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகிறது. இருத்தரப்பினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்திக் கொள்ளும் சூழலில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி விமான நிலையத்தில் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், அபுதாபி டிரோன் தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் பதிலடி கொடுக்கும் வகையில், ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகிவுள்ளது. ஆனால் 20 பேர் வரை உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இருத்தரப்பினர் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00