கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா மாறுபாடு ஏற்படும் - ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் எச்சரிக்கை
Jan 19 2022 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் மீண்டும் ஒரு கொரோனா மாறுபாடு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உருமாறியுள்ளது. இந்நிலையில் உலக பொருளாதார மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்க பணிகளை விரைவுபடுத்துவது குறித்து வலியுறுத்தினார். கடந்த 2 ஆண்டுகளில் கொரோனாவால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததாக வேதனை தெரிவித்த அவர், இந்தநிலை இப்படியே நீடித்தால் அன்றாட வாழ்க்கையும், பொருளாதாரமும் சீர்குலையும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தார். எனவே மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட தவறினால் புதிய கொரோனா மாறுபாடுகளை சந்திக்க நேரிடும் என்றும் கட்ரஸ் கூறினார்.