அமெரிக்‍காவுக்‍கு எதிராக ராணுவத்தை பலப்படுத்தும் பணிகள் தொடரும் என வடகொரியா திட்டவட்டம் - நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ள அணு ஆயுதம் தொடர்பான அனைத்து நடவடிக்‍கைகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை

Jan 20 2022 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவுக்‍கு எதிராக தங்களது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்‍கை தொடரும் என வடகொரியா அதிபர் Kim Jong Un திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ள அணு ஆயுதம் தொடர்பான அனைத்து நடவடிக்‍கைகளும் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

கொரோனா காரணமாக மோசமான பொருளாதார நிலையை அடைந்துள்ள போதிலும், உலக நாடுகளின் எச்சரிக்‍கையை மீறி, ஆண்டின் தொடக்‍கத்தில் வடகொரியா 4 முறை ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்‍கா, ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்தது. எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம் என்றும், தென்கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வடகொரியா தனது ராணுவத்தை மேம்படுத்தக் காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வடகொரியா தலைநகர் Pyongyang-ல் அந்நாட்டு அதிபர் Kim Jong Un, ஆளும் தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த பொலிட்பீரோவின் கூட்டத்தைக் கூட்டி, முக்கியமான கொள்கைப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்‍காவுக்‍கு எதிராக தங்களது ராணுவ பலப்படுத்தும் நடவடிக்‍கை தொடரும் என வடகொரியா அதிபர் Kim Jong Un திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ள அணு ஆயுதம் தொடர்பான அனைத்து நடவடிக்‍கைகளும் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00