உக்ரைன் மீது போர் தொடுக்க முயன்றால் ரஷ்யா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
Jan 20 2022 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்று, அந்நாட்டின் மீது போர் தொடுத்தால், ரஷ்யா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த 1991-ம் ஆண்டில் விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளைக் குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களுடன் 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், ரஷ்யா பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.