கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு : பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
Jan 20 2022 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கி நாட்டில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியின் தெற்கு Gaziantep மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த நகரமே வெண்போர்வையை போர்த்தியதுபோல காட்சியளிக்கிறது. பல்வேறு முக்கிய சாலைகள் பனிக்குவியலால் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். Diyarbakir நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. மேலும் பனிக்குவியலில் சிக்கித் தவித்த 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். ஹெலிகாப்டர் மூலம் சாலையில் காத்துக்கிடப்பவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. சாலையில் குவிந்துள்ள பனிக்குவியல்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.