சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட ஹெலிகாப்டர் : சோதனை ஓட்டம் வெற்றி என அரசு அறிவிப்பு

May 17 2022 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட பெரிய ரக பல்நோக்கு ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் சீனா கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்ணில் தனியாக ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்‍குவதில் தொடங்கி, உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர் தயாரிப்பது வரை பல பணிகள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓடுபாதையில் சக்‍கரங்களைப் பயன்படுத்தி ஓடும் வகையில் ​பெரிய ரக ஹெலிகாப்டர்களை தயாரிப்பதில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்திவருகிறது. இப்படித் தயாரிக்‍கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணம் செய்யமுடியும் என்றும், 13 ஆயிரத்து 800 கிலோ எடையைச் சுமக்கும் திறன் பெற்றது என்றும் ஏவியேஷன் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த ரக ஹெலிகாப்டரின் முதல் சோதனை ஓட்டப் பயணம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00