பெரு நாட்டு அதிபரைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம்
Jun 29 2022 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய பெரு நாட்டு அதிபரைக் கண்டித்து தலைநகர் லிமாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரு நாட்டு அதிபர் Pedro Castillo, தேர்தலின் போது ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, தொழிலாளர்களுக்கு சலுகைகள் அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனடிப்படையில் ஆசிரியர்களும், பல்வேறு தொழிற்சங்கத்தினர்களும் இணைந்து தலைநகர் லிமாவில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை முடக்க காவல் துறை முயன்றதால் இருதரப்புக்கும் இடையே மூண்ட சண்டை, பின்னர் கலவரத்தில் முடிந்தது. முன்னாள் ஆசிரியரும், தொழிற்சங்கத் தலைவருமான Pedro Castillo, முன்னெப்போதும் இல்லாத அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இப்போராட்டம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.