பாலஸ்தீனத்தின் காசாவில் 3 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் : எகிப்து செய்த சமரசத்தால் தற்காலிக போர் நிறுத்தம்

Aug 8 2022 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 3 நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மேற்கொண்ட சமரசத்தால் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையிலும் காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் பல கட்டடங்கள் தரைமட்டமான நிலையில், பாலஸ்தீனத்தின் அகதிகளின் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 51 பேர் உயிரிழந்தனர். 350 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் உயிரிழப்புக்கு இஸ்ரேல் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் குழு ஆகியோர் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எகிப்தின் கைரோ நகரில், இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாக்குதலை நிறுத்துவது குறித்து இரு தரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பாலஸ்தீனம் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00