கடந்த முறை ஜப்பான் பயணத்தில் ஷின்சோ அபேவுடன் நீண்டநேரம் உரையாடியதாக நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி - அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி உருக்கம்

Sep 27 2022 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் திரு. மோடி, கடந்த முறை ஜப்பான் சென்றபோது, அபேவுடன் நீண்ட நேரம் உரையாடியதை உருக்கத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.

ஜப்பானில் கடந்த ஜூலை 8-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, ஷின்சோ அபே துப்பாக்‍கிச்சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானை அதிக காலம் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள அபேவிற்கு பிரம்மாண்ட முறையில் இறுதிச்சடங்கு நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஜப்பானில் இன்று நடைபெறும் அபேவின் இறுதி சடங்கில் அமெரிக்‍க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரதமர் திரு.மோடி பங்கேற்கிறார்.

இதற்காக நேற்றிரவு டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் திரு. மோடி, ஜப்பான் தலைநகர் டோக்‍கியோ சென்றடைந்தார். இன்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடேவை சந்தித்த திரு. மோடி, இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முன்னாள் பிரதமர் அபே குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

கடந்த முறை ஜப்பான் வந்தபோது, அபேவுடன் நீண்ட நேரம் உரையாடியதாகவும், தற்போது அவர் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், அபேவை, தானும், இந்தியாவும் இழந்து விட்டோம் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00