ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி - பிரதமர் மோடி உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பு

Sep 27 2022 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் தலைநகர் டோக்‍கியோவில் நடைபெற்ற அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பிரதமர் திரு. மோடி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ஜப்பானில் கடந்த ஜூலை 8-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, ஷின்சோ அபே துப்பாக்‍கிச்சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானை அதிக காலம் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள அபேவிற்கு பிரம்மாண்ட முறையில் இறுதிச்சடங்கு நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி ஜப்பான் தலைநகர் டோக்‍கியோவில் அபேவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்‍க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரதமர் திரு. மோடி பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் திரு. மோடி, இன்று காலை அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடேவை சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் இடையே முன்னாள் பிரதமர் அபே குறித்த நினைவுகளை பிரதமர் திரு. மோடி பகிர்ந்து கொண்டார். கடந்த முறை ஜப்பான் வந்தபோது, அபேவுடன் நீண்ட நேரம் உரையாடியதாகவும், தற்போது அவர் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், அபேவை, தானும், இந்தியாவும் இழந்து விட்டோம் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00