பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சீனாவின் முயற்சி : பசுமைக் கட்டடங்களைக் கட்டுவதில் அதிக முனைப்பு
Nov 27 2022 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் விதமாக சீனாவில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை அந்நாட்டு அரசு முழு வீச்சுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாறுபட்ட கால சூழல், மழை வெள்ளம் - கடுமையான வெப்பம் உள்ளிட்ட இயற்கைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்டடங்களில் பசுமையான செடிகள் வளர்க்கும் விதத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.