தாய்லாந்தில் களைகட்டிய குரங்குகளுக்கு உணவு வழங்கும் பாரம்பரிய திருவிழா - ஒரே நேரத்தில் ஒன்று கூடி உணவை சுவைத்த ஆயிரக்கணக்கான குரங்குகள்...
Nov 27 2022 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து நாட்டின் LOPBURI நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் சுமார் 4 ஆயிரம் குரங்குகளுக்கு விதவிதமான பழங்கள் உணவாக அளிக்கப்பட்டன. கடந்த 1989ம் ஆண்டு முதல் இதுபோன்ற விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக இவ்விழா நடைபெறும் நிலையில், பயணிகளைக் கவர்வதில் இந்தக் குரங்குகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது என விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்தனர். துரியன், செர்ரி உள்ளிட்ட ஏராளமான பழங்கள் இந்த பழ விருந்தில் இடம்பெற்றிருந்தன. கடும் பசியில் இருந்த குரங்குகள், பழங்களைக் கண்டதும் ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தன