சிங்கப்பூரில் கண் கவர் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய திருவிழா-இளைஞர்கள் உற்சாகம்
Nov 27 2022 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் நடைபெற்ற Anime Festival Asia திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வித்தியாசமான அனிமேசன் கதாப்பாத்திரங்களின் வேடங்களை அணிந்தபடி உலா வந்தனர். மேலும் தங்கள் நாட்டின் பாரம்பரிய தோற்றங்களுடன் பலர் தோன்றினர். இதில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் காண்போரை ரசிக்க வைத்தது. கொரோனாவுக்குப்பின் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஆன்லைன் மூலமாக அழைப்பை ஏற்று ஏராளமானோர் அங்கு திரண்டதால் திருவிழா களைகட்டியது.