மான்ட்கோமெரி கவுண்டியில் மின்கோபுரம் மீது மோதிய சிறிய ரக விமானம் : 90,000-க்கும் அதிகமான வீடுகள், அலுவலகங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
Nov 28 2022 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணம், மான்ட்கோமெரி கவுண்டியில், சிறிய ரக விமானம் ஒன்று, மின்கோபுரம் மீது மோதியதில், 90 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் எற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.